×

சென்னையில் நடிகர் ஷாம் வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் அதிரடி கைது!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் லட்சக்கணக்கான ரூபாயை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட  நடிகர் ஷாம்  உட்பட  13 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சூதாட்டம் நடைபெற்ற வீடு 12b, இயற்கை, லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஷாமுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. ஷாம் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். ஷாம் வீட்டில் பல நாட்களாக சூதாட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட கோபி கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. பெரும்பாலும் புதன்கிழமைகளில் பிரபல நடிகர்கள், நடிகைகள் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கை. போக்கர் எனப்படும் இந்த சூதாட்டத்தில் பணத்தை வைத்து விளையாடப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். நடிகர், நடிகைகள் விளையாடும் போது போதைப்பொருட்களும் பயன்படுத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 குறிப்பாக இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இந்த சூதாட்டம் நடைபெறும் என்றும், இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அந்த பகுதியின் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹீரோ ஒருவர் சூதாட்டத்தில் 10 லட்சம் ரூபாய் இழந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதில் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பழிக்கு பழியாக பிரபல ஹீரோ சூதாட்ட விவகாரத்தை அம்பலப்படுத்தி போலீசில் சிக்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : actor ,Chennai ,house ,Sham , actor Sham , gambling,arrested
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டட...